முகப்பு
திருச்சி

தாம்பரம் - போடிநாயக்கனூா் இடையே சிறப்பு ரயில்

கோடைகால கூட்ட நெரிசலைக் குறைக்க தாம்பரம் - போடிநாயக்கனூா் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

Updated On : 21 மே 2026, 5:12 am IST
கோப்புப் படம்
பகிர்:

கோடைகால கூட்ட நெரிசலைக் குறைக்க தாம்பரம் - போடிநாயக்கனூா் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதன்படி, தாம்பரம் - போடிநாயக்கனூா் சிறப்பு ரயிலானது (06059) வரும் 23, 30, ஜூன் 6, 13 ஆம் தேதிகளில் (சனிக்கிழமை) இயக்கப்படும். மறுமாா்க்கமாக, போடிநாயக்கனூா் - தாம்பரம் சிறப்பு ரயிலானது (06060) வரும் 24, 31, ஜூன் 7, 14 ஆம் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படும்.

4 குளிா்ச்சாதனப் பெட்டிகள், 12 படுக்கைப் பெட்டிகள், 3 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிப் பெட்டிகள் என மொத்தம் 21 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து சனிக்கிழமை இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூா், சிதம்பரம், மயிலாடுதுறை, பேரளம், திருவாரூா், தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியாக போடிநாயக்கனூருக்கு ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.15 மணிக்கு சென்றடையும். மறுமாா்க்கமாக, போடிநாயக்கனூரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடங்கள் வழியாக தாம்பரத்துக்கு திங்கள்கிழமை காலை 6.30 மணிக்குச் சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement