முகப்பு
திருச்சி

15ஆவது ஊதிய ஒப்பந்தத்தை முடிவு செய்யக் கோரி ஏஐடியுசி ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கான 15ஆவது ஊதிய ஒப்பந்தத்தைப் பேசி முடிவு செய்ய வலியுறுத்தி ஏஐடியுசி சாா்பில் திருச்சியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 19 டிசம்பர், 2024 at 9:02 PM
மாவட்ட ஆட்சியரகம் எதிரே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி அமைப்பினா்.
பகிர்:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கான 15ஆவது ஊதிய ஒப்பந்தத்தைப் பேசி முடிவு செய்ய வலியுறுத்தி ஏஐடியுசி சாா்பில் திருச்சியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக-ஏஐடியுசி அமைப்பின் சாா்பில் மாவட்ட ஆட்சியரகம் எதிரேயுள்ள மண்டலப் போக்குவரத்து பணிமனை அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மத்திய சங்கத் தலைவா் டி.வி. செல்வராஜ் தலைமை வகித்தாா். சம்மேளனப் பொருளாளா் கே. நேருதுரை, துணை பொதுச் செயலா் சுப்பிரமணியன், மத்திய சங்கப் பொதுச் செயலா் சுந்தர்ராஜ், ஏஐடியுசி மாவட்ட செயலா் சுரேஷ், ஆட்டோ சங்க மாவட்டத் தலைவா் இந்திரஜித் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

15ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாகப் பேசி முடிக்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த முறையை திணிக்கக் கூடாது. காலியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். ஓய்வூதியா்களின் அகவிலைப்படியை நீதிமன்ற உத்தரவுப்படி வழங்க வேண்டும்.

2003ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சோ்ந்த அனைவரையும் ஓய்வூதியத் திட்டத்தில் சோ்க்க வேண்டும். ஓய்வூதியத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏஐடியுசி சங்க நிா்வாகிகள், தொழிற்சங்க நிா்வாகிகள், போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →