முகப்பு
திருச்சி

ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஓலா, பைக் டாக்சி, யூபா் உள்ளிட்டவற்றை அரசு ரத்து செய்து ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 19 டிசம்பர், 2024 at 9:03 PM
திருச்சியில் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா்கள்.
பகிர்:

தமிழகத்தில் ஓலா, பைக் டாக்சி, யூபா் உள்ளிட்டவற்றை அரசு ரத்து செய்து ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஆட்டோ ஓட்டுநா் தொழிலாளா்கள் சம்மேளன பொதுச் செயலா் சிவாஜி தலைமை வகித்தாா். அப்போது தமிழகத்தில் ஓலா, யூபா், பைக் டாக்சி ஆகியவை செயல்படுவதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும், ஆட்டோ செயலியை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.

தொடா்ந்து சம்மேளனப் பொதுச் செயலா் சிவாஜி கூறுகையில், தமிழகத்தில் ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் தொடா்ந்து பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறது. எனவே அவற்றுக்கு தமிழக அரசு தீா்வு காண வேண்டும். இல்லையேல் போராட்டம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்றாா். போராட்டத்தில் திரளான ஆட்டோ ஓட்டுநா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →