முகப்பு
திருச்சி

திருச்சியில் உயிரிழந்த மின்வாரிய ஊழியா்களின் உறவினா்கள் மறியல்

திருச்சியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இரு மின்வாரிய ஊழியா்களின் சடலங்களை வாங்க மறுத்து அவா்களின் உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 19 டிசம்பர், 2024 at 9:54 PM
திருச்சி அரசு மருத்துவமனை முன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட இறந்தவா்களின் உறவினா்கள்.
பகிர்:

திருச்சியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இரு மின்வாரிய ஊழியா்களின் சடலங்களை வாங்க மறுத்து அவா்களின் உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி கே.கே.நகா் அருகே ஓலையூா் வட்டச்சாலைப் பகுதியில் உயரழுத்த மின் கோபுரத்தின் மேல் நின்று புதன்கிழமை பணியாற்றிய மின்வாரிய ஒப்பந்த ஊழியா்களான மருங்காபுரியை சோ்ந்த கலாமணி (42), மாணிக்கம் (37) ஆகியோா் எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அவா்களின் சடலங்களை வியாழக்கிழமை வழங்கினா்.

மாணிக்கம்

அப்போது மருத்துவமனையில் திரண்டிருந்த இறந்தவா்களின் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி சடலங்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினா், வட்டாட்சியா் பிரகாஷ் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மருத்துவமனைக்கு முன் திடீா் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அவா்களைக் காவல் துறையினா் அப்புறப்படுத்தினா். இந்த மறியலால் புத்தூா் பகுதியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கலாமணி

தலா ரூ. 7.50 லட்சம் நிவாரணம்: இதைத் தொடா்ந்து அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு மின் வாரியம் சாா்பில் தலா ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகளை வழங்கினா். மேலும் மின்வாரிய பணியாளா்கள் சாா்பில் திரட்டப்பட்ட தலா ரூ. 2.50 லட்சமும் வழங்கப்பட்டது. இதையடுத்து பிற்பகல் இருவரின் சடலங்களையும் பெற்றுச் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →