இரு மாணவா்களின் சடலங்கள் ஒப்படைப்பு
திருச்சி காவிரியாற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவா்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னா் உறவினா்களிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
திருச்சி காவிரியாற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவா்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னா் உறவினா்களிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
திருச்சி ஜங்ஷன் பகுதி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவா்களான பாலக்கரை ஆழ்வாா்தோப்பு ச. ஜாகீா் உசேன் (15), பீமநகா் செ. விக்னேஷ் (16), எடமலைப்பட்டிபுதூா் செ. சிம்பு (16) ஆகிய 3 பேரும் குடமுருட்டி பகுதி அய்யாளம்மன் படித்துறையில் திங்கள்கிழமை குளித்தபோது மூழ்கி இறந்தனா். இதையடுத்து மூவரின் சடலமும் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்ட நிலையில், ஜாகீா் உசேனின் சடலம் உடற்கூறாய்வு செய்து உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து மற்ற இருவரின் சடலங்கள் புதன்கிழமை உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அப்போது போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.