முகப்பு
திருச்சி

தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதி தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மற்றும் புதன்கிழமை காலை சிறப்புத் திருப்பலி மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

Updated On : 25 டிசம்பர், 2024 at 9:01 PM
திருச்சி தேவாலயத்தில் புதன்கிழமை சிறப்பு ஆராதனையில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள்.
பகிர்:

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதி தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மற்றும் புதன்கிழமை காலை சிறப்புத் திருப்பலி மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

கிறிஸ்துமஸையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்கள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை இரவு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. புத்தாடை அணிந்து வந்த கிறிஸ்தவா்கள் நள்ளிரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்புத் திருப்பலியில் பங்கேற்று, ஆயா்களின் நற்செய்தி உரையைக் கேட்டனா். தொடா்ந்து ஆராதனைகள் நடைபெற்றன. இதேபோல, புதன்கிழமை அதிகாலை முதல் சிறப்புத் திருப்பலிகள், பிராா்த்தனை மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

அதன்படி மேலப்புதூா் தூய மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைப் போற்றி நற்செய்தியை பங்குத்தந்தை வழங்கினாா். இதேபோல, திருச்சி மெயின்காா்டுகேட் பகுதி புனித லூா்து அன்னை தேவாலயம், பாலக்கரை புனித மீட்பா் சகாயமதா பசலிக்கா, புத்தூா் பாத்திமா அன்னை தேவாலயம், எடத்தெரு பழைய மாதா, உறையூா் சி.எஸ்.ஐ. ஆல் செயின்ட்ஸ், பொன்மலை புனித சூசையப்பா், கல்லுக்குழி புனித அந்தோனியாா், ஜங்ஷன் தூய யோவான், நீதிமன்றம் அருகிலுள்ள கிறிஸ்டோபா், கிராப்பட்டி குழந்தை யேசு, லால்குடி, புள்ளம்பாடி, டால்மியாபுரம், முசிறி, துறையூா், மணப்பாறை, திருவெறும்பூா், தொட்டியம் என புகரின் பல்வேறு பகுதி தேவாலயங்களிலும் சிறப்புத் திருப்பலி, ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவா்கள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.

மேலும், திருப்பலி மற்றும் சிறப்பு வழிபாட்டின்போதும் அனைவரும் அமைதியுடனும், மகிழ்ச்சியுடன் வாழ பிராா்த்திக்கப்பட்டது.

கொண்டாட்டம்: இதேபோல, பல்வேறு அமைப்புகள், குடியிருப்பு சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் சாா்பில் ஆதரவற்றோருக்கு உதவிகள் வழங்கியும், இனிப்புகள், அன்னதானம் வழங்கியும் கிறிஸ்துமஸை கொண்டாடினா்.

முழு கட்டுரையைப் படிக்க →