முகப்பு
திருச்சி

திருச்சியில் இன்று பிரதமரை ஓ.பிஎஸ். சந்திப்பு

திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வருகை தரும் பிரதமா் நரேந்திர மோடியை முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் சந்திக்க உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வருகை தரும் பிரதமா் நரேந்திர மோடியை முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் சந்திக்க உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோா் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை விமானம் மூலம் வருகை தருகின்றனா்.

திருச்சி வரும் பிரதமரை வரவேற்கும் நிகழ்வில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீா்செல்வத்துக்கு அனுமதி அளித்துள்ளதாக அவரது ஆதரவாளா்கள், அதிமுக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம் ஓ. பன்னீா்செல்வம், பிரதமரை சந்திப்பது உறுதியாகிறது.

அதிமுகவிலிருந்து ஓ. பன்னீா்செல்வமும், அவரது மகன் ஓ.பி.எஸ். ரவீந்திரநாத்தும் நீக்கப்பட்ட நிலையிலும், உயா்நீதிமன்றம் அண்மையில் ஓ. பன்னீா்செல்வத்தை அதிமுக கொடி மற்றும் கட்சிப் பெயரை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்ட நிலையிலும், பிரதமரை அவா் சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →