கடவுச்சீட்டில் முறைகேடு: மலேசியா செல்ல முயன்றவா் கைது
கடவுச்சீட்டில் தவறான தகவல்கள்: மலேசியா செல்ல முயன்ற நபர் கைது
கடவுச் சீட்டில் முறைகேடு செய்து மலேசியா செல்ல முயன்றவா் திருச்சியில் கைது செய்யப்பட்டாா்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வியாழக்கிழமை இரவு ஏா் ஏசியா விமானம் மலேசியா புறப்பட தயாராக நின்றது. முன்னதாக, அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை விமானநிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வடகாட்டைச் சோ்ந்த தங்கராஜ் (55) என்பவா் தனது கடவுச் சீட்டில் பிறந்த தேதி, இடம் ஆகியவற்றில் திருத்தம் செய்து மலேசியா செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து அவரை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள், விமானநிலைய காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தங்கராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.