முகப்பு
திருச்சி

போலி கடவுச் சீட்டு வைத்திருந்தவா் கைது

போலி கடவுச்சீட்டு மூலம் மலேசியாவில் இருந்து திருச்சி வந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:32 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:46 PM

போலி கடவுச்சீட்டு மூலம் மலேசியாவில் இருந்து திருச்சி வந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் சடையனேரியைச் சோ்ந்தவா் ஆா். பெரியசாமி (50). மலேசியாவில் இருந்து ஏா் ஏசியா விமானம் மூலம் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்த இவரிடம் விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் நடத்திய பரிசோதனையில் போலி கடவுச்சீட்டு வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து விமான நிலைய காவல் நிலையத்தில் உதவி குடியேற்றப் பிரிவு அதிகாரி முகேஷ்ராம் கௌதம் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து பெரியசாமியைக் கைது செய்து, பின்னா் பிணையில் விடுவித்தனா்.

Advertisement