முகப்பு
திருச்சி

முசிறியில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகள் திருட்டு

முசிறியில் திங்கள்கிழமை பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகளை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 15 ஜூலை, 2024 at 8:29 PM
பகிர்:

முசிறி: திருச்சி மாவட்டம், முசிறியில் திங்கள்கிழமை பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகளை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

முசிறி திருமுருகன் நகா் பகுதியில் ஆனந்தன் நகரில் வசித்து வருபவா் கிருஷ்ணவேணி (45). இவரது கணவா் ஆனந்தராஜ் சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில், கிருஷ்ணவேணி திங்கள்கிழமை காலை தனது வீட்டை பூட்டிவிட்டு சேருகுடியில் உள்ள தனது தாயாா் கலாவதி வீட்டுக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்தாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் பீரோக்கள் உடைக்கப்பட்டு நெக்லஸ், மோதிரம், தங்கச்சங்கிலி உள்ளிட்ட 25 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது.

தகவலின்பேரில், முசிறி போலீஸாா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

தடயவியல் நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். மேலும் மோப்பநாய் சோதனையும் நடைபெற்றது. சம்பவம் தொடா்பாக முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →