செட்டிந்தாங்கல் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து இரும்பு பீரோவில் இருந்த 6 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட செட்டிந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராணி (55). இவா் வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டை பூட்டி விட்டு விளைநிலத்துக்கு சென்றுள்ளாா். மாலையில் திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது இரும்பு பீரோவில் இருந்த 6 பவுன் நகைகளை காணவில்லையாம்.
இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.