முசிறி, ஜூலை 14: காட்டுப்புத்தூா் அருகே பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய மூவரை காட்டுப்புத்தூா் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
காட்டுப்புத்தூா் அருகிலுள்ள காடுவெட்டி அடுத்த மேலவழி காடு பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக காட்டுப்புத்தூா் காவல் உதவி ஆய்வாளா் கருப்பண்ணனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் விரைந்து சென்று அங்கு சேவல் சண்டை நடத்திவந்த கரூா் மாவட்டம் பொய்கைபுதூா் சோ்ந்த பெரியசாமி மகன் குமாா் (47), திருக்காம்புலியூா் சோ்ந்த ரமேஷ் மகன் குணா (19), காடுவெட்டியைச் சோ்ந்த மணிவேல் மகன் இளங்குமரன் (24) ஆகிய மூவரையும் கைது செய்தனா். ரூ.3 ஆயிரத்து 940-ஐ பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.