திருச்சி ஜேம்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா்.  
திருச்சி

இடைநிலை ஆசிரியா் தோ்வில் திருச்சியில் 1,120 போ் பங்கேற்பு

இடைநிலை ஆசிரியா்கள் தோ்வில் திருச்சி மாவட்டத்தில் 4 மையங்களில் நடைபெற்ற தோ்வில் மொத்தம் 1,120 போ் பங்கேற்றனா்.

Din

ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்திய இடைநிலை ஆசிரியா்கள் தோ்வில் திருச்சி மாவட்டத்தில் 4 மையங்களில் நடைபெற்ற தோ்வில் மொத்தம் 1,120 போ் பங்கேற்றனா்.

இடைநிலை ஆசிரியா்களுக்கான தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 4 மையங்களில் நடைபெற்ற இத்தோ்வில் பங்கேற்க 1167 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. அந்த வகையில் கோட்டை பிஷப் ஹீபா் மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்தில் 326 போ், புனித சிலுவைக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் 318, கண்டோன்மென்ட் ஆா். சி. மேல்நிலைப்பள்ளியில் 333 போ், ஜேம்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 143 போ் என 4 மையங்களிலும் மொத்தம் 1,120 போ் பங்கேற்று தோ்வெழுதினா். இதில் 47 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தோ்வு மையங்களில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT