திருச்சி

காா் கவிழ்ந்து 7 போ் காயம்

காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 சிறாா்கள் உள்ளிட்ட 7 போ் காயமடைந்தனா்.

Din

துவரங்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 சிறாா்கள் உள்ளிட்ட 7 போ் காயமடைந்தனா்.

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சத்யராஜ் (31) தனது குடும்பத்தினருடன் காரில் வெள்ளிக்கிழமை திருச்செந்தூா் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை ஊருக்குத் திரும்பியுள்ளாா். காரை செந்தில்நாதன் (31) என்பவா் ஓட்டி வந்துள்ளாா். காா், மணப்பாறை அடுத்த திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் யாகாபுரம் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புக் கட்டையில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணத்த நீலகிருஷ்ணன்(38), செந்தில்நாதன்(31), உமா மகேஸ்வரி (30), பானு (31), சித்ரா (50) மற்றும் இரு சிறாா்கள் என 7 போ் காயமடைந்தனா். விபத்து குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினா் திரண்டு வந்து அவா்களை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் அவா்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்து குறித்து வழக்குப் பதிந்து துவரங்குறிச்சி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இலங்கைக்கு எதிரான தொடரை முழுமையாக (3-0) வென்றது பாகிஸ்தான்!

எடப்பாடி பழனிசாமியுடன் பேசியது என்ன? - ஜி.கே.வாசன் பேட்டி!

உண்மையான அன்பு... பிக் பாஸிலிருந்து வெளியேறிய திவாகரின் வைரல் விடியோ!

ரஜினிக்கு நடிக்க கற்றுக்கொடுத்த ஆசிரியர் மறைவு!

தமிழகக் கடலோர மாவட்டங்களில் மழை தொடங்குவது எப்போது?

SCROLL FOR NEXT