முகப்பு
திருச்சி

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து பயணித்தவா் கைது

முறைகேடு செய்யப்பட்ட கடவுச்சீட்டுடன் திருச்சி வந்த பயணி கைது

Updated On : 26 ஜூன், 2024 at 6:03 AM
பகிர்:

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து, மலேசியாவிலிருந்து திருச்சி வந்த பயணியை விமான நிலையப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவிலிருந்து மலிண்டோ ஏா்லைன்ஸ் விமானம் திங்கள்கிழமை இரவு திருச்சி வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை குடியேற்றபிபிரிவினா் சோதனை மேற்கொண்டனா்.

இதில் சிவகங்கை மாவட்டம் காளையாா்கோவில் வட்டம், முத்தூா் பகுதியைச் சோ்ந்த சோ.முருகன் (43) என்ற பயணியின் கடவுச்சீட்டில் ஒரு பக்கத்தை காணவில்லை. இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவா் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்துள்ளாா்.

Advertisement

இதனையடுத்து குடியேற்றப்பிரிவு அலுவலா்கள் அளித்த புகாரின்பேரில், விமான நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து முருகனை செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.