முகப்பு
திருச்சி

மாா்ச் 10 இல் சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

Updated On : 2 மார்ச், 2024 at 6:00 AM
பகிர்:

மண்ணச்சநல்லூா், மாா்ச் 1: சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா மாா்ச் 10 ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி அன்று விக்னேஸ்வர பூஜை , புண்ணியாக வாஜனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குராா்ப்பணம் பூஜைகளோடு காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கி பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி, தக்காரும் இணை ஆணையருமான இரா. பிரகாஷ் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.