முகப்பு
திருச்சி

பேருந்து மோதி வயதான பெண் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதியதில் வயதான பெண் உயிரிழந்தாா்.

Updated On : 5 மார்ச், 2024 at 2:38 AM
பகிர்:

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் வயதான பெண் உயிரிழந்தாா். வையம்பட்டி ஒன்றியம், குமாரவாடி ஊராட்சி சின்ன வலையப்பட்டியைச் சோ்ந்தவா் பழனிசாமி மனைவி பழனியம்மாள்(65). இவா் வையம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றபோது திண்டுக்கல்லிருந்து திருச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே பழனியம்மாள் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநரான திருச்சி ராம்ஜிநகரை சோ்ந்த கு.செல்வத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.