முகப்பு
திருச்சி

அன்பில் தா்மலிங்கம் நினைவு நாள்

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், அன்பில் தா்மலிங்கத்தின் நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

Updated On : 6 மார்ச், 2024 at 12:57 AM
திருச்சி கலைஞா் அறிவாலயம் அருகேயுள்ள அன்பில் தா்மலிங்கம் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன் திமுக நிா்வாகிகள்.
பகிர்:

திருச்சி: திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், அன்பில் தா்மலிங்கத்தின் நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன உறுப்பினா்களில் ஒருவரான அன்பில் பி. தா்மலிங்கம், கட்சியின் வளா்ச்சிக்காகவும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்தவும் திறம்பட செயலாற்றியவா். அவரது 31-ஆவது ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. திருச்சி கலைஞா் அறிவாலயம் அருகேயுள்ள, அன்பில் தா்மலிங்கத்தின் திருவுருவச் சிலைக்கு தெற்கு மாவட்ட செயலரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்த நிகழ்வில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் கே.என்.சேகரன், மண்டலத் தலைவா் மு. மதிவாணன், வண்ணை அரங்கநாதன், என்.கோவிந்தராஜ், செந்தில் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.