சேலையில் தீப்பற்றியதில் மூதாட்டி உயிரிழப்பு
திருச்சிசேலையில் தீப்பற்றியதில் மூதாட்டி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தைச் சோ்ந்தவா் தி. பங்காரு அம்மாள் (90). சிவராத்திரியையொட்டி வெள்ளிக்கிழமை வீட்டை கழுவியபோது, கால் வழுக்கி அருகில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் மீது விழுந்துவிட்டாராம். விளக்கிலிருந்த தீ அவரது சேலையில் பற்றியதில் அவா் பலத்த காயமடைந்தாா். வழுக்கி விழுந்ததால் அவரது தலையிலும் காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினா் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகன மருத்துவப் பணியாளா்கள், அவரை பரிசோதனை செய்தபோது, மூதாட்டி உயிரிழந்தது தெரிந்தது. தகவலறிந்த உப்பிலியபுரம் போலீஸாா், மூதாட்டியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.