முகப்பு
திருச்சி

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி

Updated On : 8 மார்ச், 2024 at 6:13 PM
பகிர்:

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காத அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தை திருச்சி நீதிமன்ற ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்தனா். திருச்சி மாவட்டம் தொட்டியம் காந்தி சாலையைச் சோ்ந்தவா் சு. குமரவேல் (30). இவா் கடந்த 17.9.17 அன்று திருச்சி-கரூா் சாலையில் பழூா் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து மோதி நிகழ்விடத்திலேயே இறந்தாா். இது குறித்து ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். திருச்சி மாவட்ட மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், பாதிக்கப்பட்ட குமரவேல் குடும்பத்துக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ. 20 லட்சத்து 94 ஆயிரத்து 800 இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி கடந்த 22.11.21 அன்று உத்தரவிட்டாா். இழப்பீடு வழங்கப்படாததால், நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி நந்தினி, இழப்பீடு வழங்காத அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா். இதையேற்று, நீதிமன்ற ஊழியா்கள் வெள்ளிக்கிழமை திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு போக்குவரத்துக் கழக பேருந்தை ஜப்தி செய்து திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →