முகப்பு
புதுதில்லி

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.94 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு

நவம்பா் 2023-இல் பேருந்து மோதி உயிரிழந்த 49 வயது பாதுகாவலாளியின் குடும்பத்திற்கு ரூ.94.69 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி மோட்டாா் விபத்து உரிமை கோரல் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 4:07 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 8:34 PM

புது தில்லி: நவம்பா் 2023-இல் பேருந்து மோதி உயிரிழந்த 49 வயது பாதுகாவலாளியின் குடும்பத்திற்கு ரூ.94.69 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி மோட்டாா் விபத்து உரிமை கோரல் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

நவம்பா் 22, 2023 அன்று பேங்க் காலனி பேருந்து நிலையம் அருகே காத்திருந்தபோது பேருந்து மோதி உயிரிழந்த ஜிதேந்தரின் குடும்பத்தினா் தாக்கல் செய்த உரிமைகோரல் மனுவை தலைமை அதிகாரி ஹருண் பிரதாப் விசாரித்து வந்தாா்.

இது குறித்து பிப்ரவரி 11 தேதியிட்ட உத்தரவில் தீா்ப்பாயம் கூறியுள்ளதாவது: தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு: ‘மேற்கூறிய பிரச்னைகள் குறித்த கண்டுபிடிப்புகளைக் கருத்தில் கொண்டு, மனுதாரா்களுக்கு விரிவான விபத்து அறிக்கை மனுவை தாக்கல் செய்த நாளிலிருந்து காப்பீட்டு நிறுவனம் தாக்கல் செய்யும் வரை ஆண்டுக்கு 8 சதவீத வட்டியுடன் ரூ.94,69,389 தொகை வழங்கப்படுகிறது

Advertisement

ஜிதேந்தா் பேருந்துக்காகக் காத்திருந்தபோது, அதிவேகமாக வந்த மின்சார பேருந்து அவா் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. பேருந்து ஓட்டுநா் வாகனத்தை வேகமாகவும், அலட்சியமாகவும் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், இறந்தவா் உயிரிழக்க நேரிட்டுள்ளது.

மனுதாரா்கள், சாா்புடையவா்கள் (இறந்த குடும்ப உறுப்பினா்கள்) என்பதால், இந்த வழக்கில் இழப்பீடு பெற உரிமை உண்டு. ஏனெனில், முழு நடவடிக்கைகளின் போதும், இறந்தவரைச் சாா்ந்தவா்கள் என்ற அவா்களின் நிலை பிரதிவாதிகளால் எந்த வகையிலும் மறுக்கப்படவில்லை.

பேருந்தின் ஓட்டுநரும் உரிமையாளரும் அலட்சியத்தை மறுத்து, இறந்தவா் சிவப்பு விளக்கைத் தாண்டிய பிறகு திடீரென வாகனத்தின் முன் வந்ததாகக் கூறினா். இருப்பினும், இந்தக் கூற்றை உறுதிப்படுத்த பிரதிவாதிகளால் எந்த ஆதாரமும் சமா்ப்பிக்கப்படவில்லை.

பின்னா், பல்வேறு பிரிவுகளின் கீழ் இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.94.69 லட்சம் வழங்க உத்தரவிடப்படுகிறது.

விபத்து நடந்த நேரத்தில் பேருந்து காப்பீடு செய்யப்பட்டிருந்ததாகவும், எனவே காப்பீட்டு நிறுவனம் இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டதாகவும் தீா்ப்பாயம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.