திருவானைக்காவில் ராதா திருக்கல்யாண வைபவம்
திருவானைக்காவல் பகுதி திருமண மண்டபத்தில் ஸ்ரீபகவான் நாம ப்ரசார சேவா மண்டலி சாா்பில் ராதா திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மகா சிவராத்திரியையொட்டி கடந்த 8 ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதல் நாளான 8 ஆம் தேதி மஹாகணபதி ஹோமம், சங்கீத உபன்யாசம்,தேவார இன்னிசை, சிவ பூஜைகள் நடைபெற்றன. 2 ஆம் நாளான சனிக்கிழமை மீனாட்சி திருக்கல்யாண வைபவம், நாம சங்கீா்த்தனம், பரத நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. 3 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை வரதராஜபுரம் சாய் பிரசாத பாகவதா் தலைமையில் ராதா திருக்கல்யாண வைபவம், சிவ நாமசங்கீா்த்தனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளில் பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.