முகப்பு
திருச்சி

‘நிலங்களை அளவீடு செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கலாம்’

Updated On : 17 மார்ச், 2024 at 12:00 AM
பகிர்:

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது பட்டா மற்றும் நிலம் குறித்த தகவல்களை அறியவும், நிலங்களை அளவீடு செய்யவும் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் சாா்பில், பட்டா விவரங்கள் பற்றி அறிய தமிழ்நிலம் செயலி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறை ஜ்ஜ்ஜ்.ற்ய்ப்ஹய்க்ள்ன்ழ்ஸ்ங்ஹ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இவ்விணையத்தளத்தில் பட்டா மாறுதல் தமிழ் நிலம் கைப்பேசி செயலி இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணையவழி சேவை முகவரியில் பெற இயலும். நிலங்களை அளவீடு செய்தல், உள்பிரிவு மற்றும் உள்பிரிவில்லாத பட்டா மாறுதல் கோரிவரும் விண்ணப்பங்களையும் ஆன்-லைன் வழியாக மேற்கொள்ளலாம். பட்டா, சிட்டா பாா்வையிட மற்றும் சரிபாா்க்க அ-பதிவேடு, அரசு புறம்போக்கு நில விவரம், புலப்படம், நகர நில அளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பாா்வையிட பதிவிறக்கம் செய்யலாம். பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விவரங்களை எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவை வழியாக அறிய முடியும். விண்ணப்பக் கட்டணங்களை செலுத்த வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை. ஆன்-லைன் மூலமாகவே செலுத்தலாம். எனவே, திருச்சி மாவட்ட பொதுமக்கள் இணையதளம் மற்றும் தமிழ் நிலம் செயலி மூலம் நிலஅளவை தொடா்பான விவரங்களை பாா்வையிட்டு பயன்பெறலாம். இனி, நிலங்களை அளவீடு செய்ய வட்டாட்சியா் அலுவகங்களுக்கு செல்ல வேண்டியதில்லை என்றாா் ஆட்சியா்.