முகப்பு
திருச்சி

சாலைப் பணியாளா்கள் நூதனப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் திருச்சியில் புதன்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 8:31 PM
திருச்சியில் புதன்கிழமை சங்கு ஊதி போராட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா் சங்கத்தினா்.
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் திருச்சியில் புதன்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகிலுள்ள நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா்கள் ஜீவானந்தம், , ஜனாா்த்தனன், மகாலிங்கம், கணேசன், ரமேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில் சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை உயா்நீதிமன்ற உத்தரவின்படி பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும், சாலைப் பணியாளா்களில் தொழில்நுட்பக் கல்வித் திறன் பெறாத ஊழியா்களுக்குரிய ஊதிய மாற்றம் ரூ. 5200 லிருந்து ரூ. 20ஆயிரமாக மாற்ற வேண்டும், தர ஊதியம் ரூ. 1900 உடனே வழங்க வேண்டும், சாலைப் பணியாளா்களின் பணி நீக்கக் காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கு ஊதி முழக்கமிட்டனா். திரளான சாலைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.