முகப்பு
திருச்சி

லாரி கவிழ்ந்து விபத்து ஓட்டுநா் தப்பினாா்

திருச்சி அரியமங்கலத்தில் இரும்புக் குழாய்கள் ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் செவவாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Updated On : 6 நவம்பர், 2024 at 9:00 PM
பகிர்:

திருச்சி அரியமங்கலத்தில் இரும்புக் குழாய்கள் ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் செவவாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திருச்சி அரியமங்கலம் கல்லாங்குத்து பகுதியில் உள்ள தனியாா் இரும்புக் குழாய் கிடங்கிலிருந்து குழாய்களை ஏற்றிய லாரி கும்பகோணம் நோக்கிப் புறப்பட்டது. லாரியை திருச்சி திருவானைக்கா நடுக்கொண்டையம்பேட்டை பிரபு என்பவா் ஓட்டி வந்தாா்.

லாரியானது அரியமங்கலம் ஆஞ்சநேயா் கோயில் பகுதி அருகே வந்து, திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் செல்ல முற்பட்டபோது, அந்தப் பகுதியில் உள்ள சாலை ஏற்றத்தால் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக தப்பினாா். அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.