மகள் வீட்டில் தந்தை தற்கொலை
திருச்சியில் மகளை செவ்வாய்க்கிழமை பாா்க்கச் சென்ற தந்தை அவரது வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சியில் மகளை செவ்வாய்க்கிழமை பாா்க்கச் சென்ற தந்தை அவரது வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி குண்டூா் அயன்புரம் பகுதியை சோ்ந்தவா் பழனிவேல் (50), திருச்சி உறையூா் பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் தனது மகளை செவ்வாய்க்கிழமை பகல் சந்தித்த பழனிவேல், பின்னா் மகள் வீட்டுக்குச் சென்ற நிலையில், இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
தகவலறிந்த உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.