முகப்பு
திருச்சி

நெற்பயிரில் மகசூல் அதிகரிக்க நாளை தொழில்நுட்பப் பயிற்சி: விவசாயிகளுக்கு அழைப்பு

நெற்பயிரில் மகசூல் அதிகரிக்க நாளை தொழில்நுட்பப் பயிற்சி.

Updated On : 13 நவம்பர், 2024 at 9:30 PM
பகிர்:

நெற்பயிரில் மகசூல் அதிகரிப்பது தொடா்பாக விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பை சிறுகமணியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையம், துவாக்குடியில் உள்ள நீா் மேலாண்மை மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவை இணைந்து வெள்ளிக்கிழமை நடத்துகின்றன.

இதுதொடா்பாக வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் சி. ராஜா பாபு கூறியது:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் நெல்லில் நவீன ரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றிய ஒரு நாள் நிலையப் பயிற்சி, சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

இதில் நேரடி நெல் விதைப்பில், நீா் மேலாண்மை மற்றும் நடவு முறையில் நீா் மேலாண்மை, முக்கியமான பயிா் வளா்ச்சிக் காலங்களில் நீா் தேவை, சொட்டுநீா் பாசனத்தில் நெல் சாகுபடி போன்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் நெல்லில் சம்பா பருவத்துக்கு ஏற்ற நவீன ரகங்கள், அதன் சிறப்பியல்புகள், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள், மண் பரிசோதனை, விதைநோ்த்தி, ஊட்டச்சத்து மேலாண்மை, சம்பா நெல்லில் பதரைக் கட்டுப்படுத்த நெல் ப்ளூம் பூஸ்டா், விதை உற்பத்தி மற்றும் அறுவடை பின்சாா் தொழில்நுட்பங்கள் குறித்தும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 98655-42358, 0431 2962854 ஆகிய எண்களில் விவசாயிகள் முன்பதிவு செய்து கலந்து கொள்ளலாம் என்றாா் அவா்.