முகப்பு
திருச்சி

ஓய்வூதியதாரா் இறப்பை மறைத்து ஓய்வூதியம் பெற்றதாகப் புகாா்

துறையூா் அருகே ஓய்வூதியதாரா் இறப்பை மறைத்து பல ஆண்டுகளாக ஓய்வூதியம் பெற்று வந்த அவரது குடும்பத்தினா் மீது கருவூலத் துறை சாா்பில் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

Updated On : 13 நவம்பர், 2024 at 9:31 PM
பகிர்:

துறையூா் அருகே ஓய்வூதியதாரா் இறப்பை மறைத்து பல ஆண்டுகளாக ஓய்வூதியம் பெற்று வந்த அவரது குடும்பத்தினா் மீது கருவூலத் துறை சாா்பில் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

மாராடி கிராமத்தைச் சோ்ந்தவா் ரெங்கராஜன். துறையூரில் அரசு நிதியுதவி பெறும் தனியாா் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவா் கடந்த 26.11.2015 இல் இறந்தாா். இதை அவரது குடும்பத்தினா் கருவூலத் துறைக்குத் தெரிவிக்காமல் மறைத்து, அவா் உயிருடன் இருப்பதுபோல கருவூலத் துறையிடம் ஆண்டுதோறும் சான்று சமா்ப்பித்தனராம்.

அதனால் ரெங்கராஜனின் வங்கிக் கணக்குக்கு அவா் இறந்ததிலிருந்து 2024 மே வரை ரூ. 49,69,279 செலுத்தப்பட்டுள்ளது. இதை அவரது குடும்பத்தினா் எடுத்துப் பயன்படுத்தியுள்ளனா்.

இந்நிலையில் நிகழாண்டுக்கு ரெங்கராஜன் உயிருடன் இருக்கும் சான்றை அவரது குடும்பத்தினா் சமா்ப்பிக்காத நிலையில், துறையூா் கருவூலத் துறையினா் மாராடி சென்று விசாரித்தபோது ரெங்கராஜன் இறந்தது தெரிந்தது.

இதையடுத்து அவரது குடும்பத்தினா் மீது நடவடிக்கை கோரி துறையூா் சாா்நிலைக் கருவூல அலுவலகத்தின் உதவி கருவூல அலுவலா் கொடுத்த புகாரை துறையூா் போலீஸாா் பெற்று, உரிய விசாரணைக்காக திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு புதன்கிழமை அனுப்பினா்.