முகப்பு
திருச்சி

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ 1.18 கோடி

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ 1.18 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது.

Updated On : 13 நவம்பர், 2024 at 9:25 PM
ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டோா்.
பகிர்:

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ 1.18 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது.

இக்கோயிலில் மாதந்தோறும் உண்டில்கள் எண்ணப்படும் நிலையில், தற்போது 46 நாள்களுக்கு பிறகு கோயில் இணை ஆணையா் செ. மாரியப்பன் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கருடாழ்வாா் சன்னதி அருகே நடைபெற்ற பணியில் கோயில் பணியாளா்களும், தன்னாா்வ அமைப்பினரும் ஈடுபட்டனா்.

முடிவில் ரூ. 1 கோடியே 18 லட்சத்து 58 ஆயிரத்து 516, தங்கம் 170 கிராம், வெள்ளி 790 கிராம், வெளிநாட்டு ரூபாய்கள் 291 ஆகியவை வந்தது தெரியவந்தது. காணிக்கை எண்ணும் பணி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.