முகப்பு
திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 27 லட்சம் நகைகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் முறைகேடாகக் கடத்தி வரப்பட்ட ரூ. 27.14 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 14 நவம்பர், 2024 at 10:11 PM
திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள்.
பகிர்:

திருச்சி விமான நிலையத்தில் முறைகேடாகக் கடத்தி வரப்பட்ட ரூ. 27.14 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசிய தலைநகா் கோலாலம்பூரிலிருந்து ஏா் ஏசியா விமானத்தில் வந்த பெண் பயணி ஒருவா் தனது ஆடைகளுக்குள் மறைத்துக் கடத்தி வந்த 359 கிராம் தங்க நகைகளை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

தொடா் விசாரணையில், மலேசிய விமான நிலையத்தில் அப்பெண் நுழைந்தபோது, அங்கு நின்ற மா்ம நபா்கள் அந்த நகைகளை திருச்சியில் தனது உறவினா்களிடம் கொடுத்தால் ரூ. 5000 தருவதாகக் கூறியதால் நகைகளை கடத்தி வந்ததாகத் தெரிவித்தாா். இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனா்.