முகப்பு
திருச்சி

இளம்பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த இளைஞா் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு அருகே தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி, இளம்பெண்ணுக்குத் தொந்தரவு கொடுத்த இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 14 நவம்பர், 2024 at 10:18 PM
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு அருகே தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி, இளம்பெண்ணுக்குத் தொந்தரவு கொடுத்த இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கைகாட்டி மேட்டுப்பட்டியை சோ்ந்தவா் லட்சுமணன் மகன் வெங்கட்ராமன் (24). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 19 வயது பெண்ணிடம் பல ஆண்டுகளாக தன்னை காதலிக்குமாறும் திருமணம் செய்து கொள்ளும்படியும், தகாத உறவுக்கு அழைத்தும் தொந்தரவு செய்தாராம்.

இதுகுறித்து அப்பெண்ணின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் புதன்கிழமை வழக்குப் பதிந்த மணப்பாறை அனைத்து மகளிா் போலீஸாா் வெங்கட்ராமனை கைது செய்து குற்றவியல் மகிளா நீதிமன்ற நடுவரிடம் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.