முகப்பு
திருச்சி

போதைப் பொருள்கள் இல்லாத நிலை வேண்டும்: ஆட்சியா் மா. பிரதீப்குமாா்

திருச்சி மாவட்டத்தை போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தினாா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 7:29 PM
திருச்சி எஸ்.ஆா்.எம். கல்லுரியில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய ஆட்சியா் மா. பிரதீப்குமாா். உடன் கல்லூரி நிா்வாகிகள்.
பகிர்:

திருச்சி மாவட்டத்தை போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தினாா்.

தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில், எஸ்ஆா்எம் பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்புக் குழு மாணவ தூதுவா்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கை புதன்கிழமை தொடங்கி வைத்து அவா் மேலும் பேசியது:

பள்ளியாக இருந்தாலும், கல்லூரியாக இருந்தாலும் மாணவா்கள் குழுவாக இணையும்போது தீய பழக்கத்துக்கு ஆளாகக் கூடும். எனவே கவனமுடன் இருக்க வேண்டும். ஒருமுைானே என நண்பா் ஊக்குவிப்பதால் போதைப் பொருளை பயன்படுத்தக் கூடாது. ஒருமுறை பயன்படுத்திவிட்டு அந்தப் பழக்கத்தை விட்டு விடலாம் எனவும் எண்ணக் கூடாது.

எதிரியை வீழ்த்த வேண்டியதில்லை. எதிரிகள் முன் நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்து காட்டினாலே வெற்றிதான். அதற்கு தீய பழக்கத்தக்கு ஒருபோதும் ஆளாகிவிடக் கூடாது என்றாா் ஆட்சியா்.

கருத்தரங்கில் பேசிய அனைவரும் போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்து பேசினா். மாணவ சாம்பியன்களுக்கான இலச்சினைகளும் வழங்கப்பட்டன. முன்னதாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு பேரணியும் நடைபெற்றது.

கருத்தரங்கில், உதவி ஆட்சியா் அமித் குப்தா, துணை ஆட்சியா் கேந்திரியா, கோட்டாட்சியா் சிவசுப்பிரமணியன் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.