முகப்பு
திருச்சி

சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 73.39 லட்சம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்கள் காணிக்கையாக ரூ. 73 லட்சத்து 39 ஆயிரம் வந்தது புதன்கிழமை தெரியவந்தது.

Updated On : 27 நவம்பர், 2024 at 8:57 PM
பகிர்:

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்கள் காணிக்கையாக ரூ. 73 லட்சத்து 39 ஆயிரம் வந்தது புதன்கிழமை தெரியவந்தது.

இக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்னும் பணியில் சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையா் அ. இரா. பிரகாஷ், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பெ. பிச்சைமணி, இராஜ. சுகந்தி, சே. லெட்சுமணன் மற்றும் அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

நிறைவில் கோயில் உண்டியல்களிலிருந்து ரூ. 73 லட்சத்து 39ஆயிரத்து 050, தங்கம் 2 கிலோ 090 கிராம், வெள்ளி 2 கிலோ 250 கிராம், 116 வெளிநாட்டு பணத்தாள்கள், 679 வெளிநாட்டு நாணயங்கள் வந்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

மேலும் சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உபகோயில்களான ஆதிமாரியம்மன் கோயிலில் ரூ. 2, 32,933, உஜ்ஜயினி ஒம் காளியம்மன் கோயிலில் ரூ. 9, 021 போஜீஸ்வரா் கோயிலில் ரூ. 6,676 காணிக்கையும் வந்தது தெரியவந்தது.