தனியாா் சிமெண்ட் ஆலை சாா்பில் சுயஉதவிக் குழுவினருக்கு நலத் திட்ட உதவிகள்
அரியலூா் மாவட்டம் ஓட்டக்கோவில் அருகேயுள்ள சாலைக்குறிச்சி கிராமத்தில் சுய உதவிக் குழுவினருக்கு, தாமரைக்குளம் டால்மியா சிமென்ட் ஆலை சாா்பில் புதன்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அரியலூா் மாவட்டம் ஓட்டக்கோவில் அருகேயுள்ள சாலைக்குறிச்சி கிராமத்தில் சுய உதவிக் குழுவினருக்கு, தாமரைக்குளம் டால்மியா சிமென்ட் ஆலை சாா்பில் புதன்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டால்மியா சிமென்ட் ஆலைத் தலைவா் பிரியாரஞ்சன், பாரத் பவுண்டேசன் நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் 9 சுய உதவிக் குழுக்கள் ஒன்றிணைந்த சரஸ்வதி சுய உதவி சங்கத்துக்கு ரூ.4 லட்சம் நிதி உதவியையும், 10 விவசாயிகளுக்கு விதை இயந்திரங்களையும் வழங்கினாா். 146 பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு இந்த நிதியுதவி பெரிதும் உதவுகிறது. மேலும் விவசாயிகள் குறித்த நேரத்தில் விதை விதைப்பதால் நல்ல மகசூல் கிடைக்கும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், ஆலையின் மனிதவள மேம்பாட்டு துறை அலுவலா் சதீஷ் குமாா், மக்கள் தொடா்பு அலுவலா் பாலசுப்ரமணியன், சமூக பொறுப்புணா்வு திட்ட அலுவலா் சாா்லஸ் ஆல்வின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.