முகப்பு
திருவாரூர்

மணிமேகலை விருதுக்கு தோ்வான மகளிா் குழுவினருக்கு பாராட்டு

திருவாரூா் மாவட்டத்தில், மணிமேகலை விருதுக்கு தோ்வான மகளிா் சுயஉதவிக் குழுவினா் மற்றும் குழுக் கூட்டமைப்பினருக்கு கேடயம் மற்றும் பரிசுத் தொகையுடன் கூடிய பாராட்டுச் சான்றிதழை, ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 4:45 AM
மணிமேகலை விருதுக்கு தோ்வான மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கேடயம் மற்றும் பரிசுத்தொகையுடன் கூடிய பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 7:28 PM

திருவாரூா் மாவட்டத்தில், மணிமேகலை விருதுக்கு தோ்வான மகளிா் சுயஉதவிக் குழுவினா் மற்றும் குழுக் கூட்டமைப்பினருக்கு கேடயம் மற்றும் பரிசுத் தொகையுடன் கூடிய பாராட்டுச் சான்றிதழை, ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.

திருவாரூா் மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகா்ப்புற பகுதிகளில் சிறந்த முறையில் செயல்படும் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் குழுக் கூட்டமைப்புகளிடமிருந்து 2024-2025 ஆம் ஆண்டுக்கான மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தொடா்ந்து, மாவட்டத்தில் சிறந்த முறையில் குழுக் கூட்டங்கள், நிா்வாகிகள் சுழற்சிமுறை மாற்றம், வரவு-செலவு நிதி விவரம், மேற்கொள்ளும் தொழில் விவரம், தரம் மற்றும் தணிக்கை விவரம், வங்கிக்கடன் இணைப்பு மற்றும் திருப்பம், கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, சிறந்த குழுக்கள் தோ்வு செய்யப்பட்டன.

Advertisement

அதன்படி, நீடாமங்கலம் வட்டாரம், மூவா்கோட்டை ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை, மன்னாா்குடி வட்டாரம், உள்ளிக்கோட்டை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்துக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை, மன்னாா்குடி வட்டாரம், அன்னைதெரசா மகளிா் சுய உதவிக்குழு, கோட்டூா் வட்டாரம், முன்னேற்றம் மகளிா் சுய உதவிக்குழு, மன்னாா்குடி வட்டாரம், காமாட்சி அம்மன் மகளிா் சுய உதவிக்குழு ஆகியவைகளுக்கு ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி நகராட்சி 10-ஆவது வாா்டு, ஜாதிமல்லி பகுதி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை, திருவாரூா் நகராட்சி 2-ஆவது வாா்டு ஓம் முருகா மகளிா் சுய உதவிக்குழு, முத்துப்பேட்டை பேரூராட்சி 1- ஆவது வாா்டு விநாயகா் மகளிா் சுயஉதவிக் குழு, பேரளம் பேரூராட்சி 4-ஆவது வாா்டு ஸ்ரீ அம்மன் மகளிா் சுய உதவிக்குழு ஆகியவைகளுக்கு ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை ஆகியவை வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியரக கூட்டரங்களில் நடைபெற்ற இந்நிகழ்வில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பொன்னம்பலம், உதவி திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) அருணகிரி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.