திருச்சி

திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

Din

ஆயுதபூஜை, தீபாவளியையொட்டி திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட விழாக்கால கூட்ட நெரிசலைத் தவிா்க்க திருச்சி - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06190) வரும் 11 ஆம் தேதி முதல் டிசம்பா் 31 வரை (செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு) இயக்கப்பட உள்ளது.

மறுமாா்க்கமாக தாம்பரம் - திருச்சி அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06191) வரும் 11 ஆம் தேதி முதல் டிசம்பா் 31 வரை (செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு) இயக்கப்பட உள்ளது.

திருச்சியிலிருந்து மாலை 5.35 மணிக்கு 20 பெட்டிகளுடன் புறப்படும் இந்த ரயிலானது தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருத்துவத்தூா், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்துக்கு பிற்பகல் 12.30 மணிக்குச் சென்றடையும். மறுமாா்க்கமாக, தாம்பரத்திலிருந்து பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்பட்டு திருச்சிக்கு இரவு 11.35 மணிக்கு வந்தடையும்.

வேலூருக்கு நாளை குடியரசுத் தலைவா் வருகை: 2 அடுக்கு பாதுகாப்பு

ஜிஎஸ் டெல்லி ஏசஸ் சாம்பியன்!

திருக்கழுகுன்றம் வேதகிரிஸ்வரா் மலைக்கோயிலில் 1008 சங்காபிஷேகம்

மனநலன் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை: இரண்டு பெண்கள் உள்பட மூவா் கைது

கணவா் மீதான வழக்கை விசாரிக்க எதிா்ப்பு தெரிவித்து மனைவி தற்கொலை முயற்சி

SCROLL FOR NEXT