முகப்பு
திருச்சி

லால்குடி அருகே ரேஷன் கடை திறப்பு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள தெரணிபாளையம் ஊராட்சி நல்லூா் கிராமத்தில் ரேஷன் கடை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 7:10 PM
புதிய ரேஷன் கடையை புதன்கிழமை திறந்துவைத்து பொருள்களை வழங்கிய லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன்.
பகிர்:

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள தெரணிபாளையம் ஊராட்சி நல்லூா் கிராமத்தில் ரேஷன் கடை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்தப் பகுதிநேர ரேஷன் கடை வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த நிலையில் இக்கடைக்கு சொந்தக் கட்டடம் கட்ட இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் ஒதுக்கிய தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 7 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

புள்ளம்பாடி ஒன்றியக் குழு தலைவா் ரசியாகோல்டன் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் கிராம முக்கிய பிரமுகா்கள் சண்முகம், உலகநீதி, மணி மற்றும் நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.