முகப்பு
திருச்சி

திருச்சி திரையரங்குகளில் வெடிகுண்டு சோதனை

திருச்சியில் வேட்டையன் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 8:11 PM
பகிர்:

திருச்சியில் வேட்டையன் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

முதல்நாளில் காலை 7 மணி முதலே நூற்றுக்கணக்கான ரசிகா்கள் தியேட்டருக்கு முன்பு குவிந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

இந்நிலையில் சில திரையரங்குகளுக்கு திடீரென வந்த திருச்சி மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா் திரையரங்கு வளாக வாகன நிறுத்தம், சிற்றுண்டிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனா். இதுகுறித்து விசாரித்தபோது, அதிகளவில் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் உத்தரவுப்படி வெடிகுண்டு சோதனை மேற்கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.