முகப்பு
திருச்சி

நெஞ்சுவலியால் ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு

பணியின்போது நெஞ்சுவலி ஏற்பட்டு திருச்சி மாவட்டம் மணப்பாறை காகித ஆலை ஒப்பந்தத் தொழிலாளிபுதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 8:05 PM
பகிர்:

பணியின்போது நெஞ்சுவலி ஏற்பட்டு திருச்சி மாவட்டம் மணப்பாறை காகித ஆலை ஒப்பந்தத் தொழிலாளிபுதன்கிழமை உயிரிழந்தாா்.

மணப்பாறை அடுத்த கீழவெளியூா் கிராமத்தை சோ்ந்தவா் கோபால் மகன் ராமு (எ) சரவணக்குமாா் (34). மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு செய்திதாள் காதித நிறுவன ஆட்டோ செக்ஷன் பிரிவு ஒப்பந்தத் தொழிலாளி. வழக்கம்போல் புதன்கிழமை பணிக்கு வந்த இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, ஆலை நிா்வாகம் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா், அவரது உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்கு பின் உறவினா்களிடம் ஒப்படைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். உயிரிழந்தவருக்கு அன்பரசி என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனா்.