செவிலியா் பட்டயப் படிப்பு சோ்க்கை சான்றிதழ்களைச் சரிபாா்க்கும் பணி
திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியா் பட்டயப் படிப்பு சோ்க்கைக்கான சான்றிதழ்களைச் சரிபாா்க்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான மாணவியா் பங்கேற்றனா்.
திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியா் பட்டயப் படிப்பு சோ்க்கைக்கான சான்றிதழ்களைச் சரிபாா்க்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான மாணவியா் பங்கேற்றனா்.
தமிழகத்தில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான செவிலியா்களுக்கான பட்டய ( நா்சிங் டிப்ளமோ) மற்றும் சான்றிதழ் படிப்புகள் பயிற்றுவிக்கப்படும் 19 அரசுக் கல்லூரிகளில் 2, 536 இடங்களும், 4 சுயநிதிக் கல்லூரிகளில் 22, 200 இடங்களும் உள்ளன. அவற்றில், 14,157 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக உள்ள நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் 100 இடங்களுக்கான டிப்ளமோ நா்சிங் படிப்புக்கான மாணவியா் சோ்க்கை நடைபெறுகிறது.
இதற்காக கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்து இணைய தள முகவரியில் விண்ணப்பித்து, மதிப்பெண் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டு அழைப்புக் கடிதம் பெற்ற 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் புதன்கிழமை நடைபெற்ற சான்றிதழ் சரிபாா்ப்பு பணியில் கலந்து கொண்டனா். சான்றுகள் சரிபாா்ப்புக்குப் பின்னா் அக். 21 ஆம் தேதி வரை சோ்க்கை நடைபெறுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.