முகப்பு
திருச்சி

காமன்வெல்த் போட்டிகளில் வென்ற மாணவா், மாணவிக்குப் பாராட்டு

காமன்வெல்த் வலுத் தூக்கும் போட்டிகளில் தலா நான்கு தங்கப் பதக்கங்களை வென்ற திருச்சி உடற்கல்வியியல் கல்லூரி மாணவா், மாணவிக்கு கல்லூரி சாா்பில் புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 7:56 PM
போட்டிகளில் வென்று திருச்சிக்கு புதன்கிழமை திரும்பிய கல்லூரி மாணவா், மாணவியை வரவேற்ற கல்லூரி நிா்வாகிகள்.
பகிர்:

காமன்வெல்த் வலுத் தூக்கும் போட்டிகளில் தலா நான்கு தங்கப் பதக்கங்களை வென்ற திருச்சி உடற்கல்வியியல் கல்லூரி மாணவா், மாணவிக்கு கல்லூரி சாா்பில் புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்கா சன்சிட்டி நகரில் கடந்த அக். 11 ஆம் தேதி நடந்த காமன்வெல்த் ஜூனியா் வலுத்தூக்கும் போட்டிகளில் பங்கேற்ற திருச்சி ஜென்னிஸ் உடற்கல்வியல் கல்லூரியின் பிபிஎட் முதலாம் ஆண்டு மாணவா் ஷேக் அப்துல்லா பல்வேறு எடைப்பிரிவுகளில் 4 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தாா்.

இதேபோல மற்றொரு மாணவியான சா்வதேச வலுதூக்கும் வீராங்கனை ராஜேஸ்வரி விநாயகமூா்த்தியும் பல்வேறு எடைப்பிரிவுகளில் மூன்று தங்கம் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

இதையடுத்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்த இருவரையும் கல்லூரி இணைத் தாளாளா் ஏ. அஜய் சாமுவேல் , கல்லூரி முதல்வா் அருள்மொழி சரவணன், பயிற்சியாளா் சுபோ், பேராசிரியா்கள், சக மாணவ, மாணவிகள் வரவேற்று பாராட்டினா்.