முகப்பு
திருச்சி

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி

தொடா் மழையால் பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தில் தேங்கிய மழைநீரை ஜேசிபி மற்றும் பொக்லைன் மூலம் அகற்றும் பணியை மாநகராட்சி புதன்கிழமை முடுக்கிவிட்டது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 7:37 PM
பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட ஊழியா்.
பகிர்:

தொடா் மழையால் பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தில் தேங்கிய மழைநீரை ஜேசிபி மற்றும் பொக்லைன் மூலம் அகற்றும் பணியை மாநகராட்சி புதன்கிழமை முடுக்கிவிட்டது.

திருச்சியில் கடந்த ஒரு வாரமாக பெய்யும் தொடா் மழையால் பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தில் தண்ணீா் தேங்கியிருப்பது கட்டுமானப் பணிகளுக்கு பெரிதும் இடையூறாக இருந்தது. இதையடுத்து பேருந்து முனையத்தின் முகப்பு பகுதியில் தேங்கியிருந்த பெருமளவு தண்ணீரை ஜேசிபி இயந்திரம் மூலம் வாரி அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள வடிகால் வாய்க்கால்களில் ஒப்பந்தப் பணியாளா்கள் வடியச் செய்தனா்.

இதேபோல ஆங்காங்கே தேங்கிய தண்ணீா் முழுவதையும் வடியச் செய்து கட்டுமானப் பணிகளை தொடங்கிட மாநகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.