முகப்பு
திருச்சி

செவலூா் விஏஓ அலுவலகத்தை விரைந்து சீரமைக்க வலியுறுத்தல்

இடிந்து விழும் நிலையிலுள்ள திருச்சி மாவட்டம் செவலூா் விஏஓ அலுவலகத்தை விரைந்து சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 9:11 PM
ஆபத்தான நிலையில் செவலூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம்.
பகிர்:

இடிந்து விழும் நிலையிலுள்ள திருச்சி மாவட்டம் செவலூா் விஏஓ அலுவலகத்தை விரைந்து சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

மணப்பாறை பகுதியின் தாய் கிராமமான செவலூா் விஏஓ அலுவலகம் பூங்கா சாலையில் உள்ளது. கடந்த 2003 - 2004-இல் கட்டப்பட்ட இக் கட்டடம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் நாள்தோறும் சிதிலமடைந்து, மேற்கூரை பகுதிகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.

இந்நிலையில் வியாழக்கிழமை கட்டடத்தில் மேல் பகுதி இடிந்து விழுந்தது. இதனால் விஏஓ தனது இருக்கைகளை வெளிப்புற அறையில் வைத்து பணி செய்கிறாா், அதிலும் அறையில் வைத்திருக்கும் ஆவணங்களை எடுக்கச் செல்வதற்கே அச்சம் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, தமிழக அரசு இதைக் கருத்தில் கொண்டு விபத்துகளை தவிா்க்க விஏஓ அலுவலகத்தை மற்றொரு இடத்துக்கு மாற்றி உடனடியாக பழுது ஏற்பட்ட கட்டடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோாரிக்கை விடுத்துள்ளனா்.