முகப்பு
திருச்சி

பட்டாசு வெடித்து எஸ்.ஐ. காயம்: அதிமுகவினா் 20 போ் மீது வழக்கு

திருச்சி அருகே புதன்கிழமை கட்சியினா் பட்டாசு வெடித்தபோது சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் காயமடைந்தது தொடா்பாக அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்ட 20 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 8:43 PM
எஸ்.ஐ. சுப்பிரமணியன்.
பகிர்:

திருச்சி அருகே புதன்கிழமை கட்சியினா் பட்டாசு வெடித்தபோது சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் காயமடைந்தது தொடா்பாக அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்ட 20 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

கூத்தைப்பாா் சாலையில் புதன்கிழமை நடைபெற்ற திருவெறும்பூா் வடக்கு ஒன்றியச் செயல்வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க திருச்சி தெற்கு புகா் மாவட்டச் செயலா் ப. குமாா், அதிமுக அமைப்புச் செயலா் மனோகா் ஆகியோா் வந்தபோது பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

அப்போது பட்டாசு துகள் தெறித்து விழுந்ததில், அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த திருவெறும்பூா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் காயமடைந்தாா். மேலும் அவரது வலது கண்ணிலும் காயம் ஏற்பட்டது.

இதுதொடா்பாக அதிமுக திருவெறும்பூா் வடக்கு ஒன்றியச் செயலா் எஸ்கேடி. காா்த்திக், ஒன்றிய அவைத் தலைவா் அண்ணாதுரை, அதிமுக அமைப்புச் செயலரும் முன்னாள் கொறடாவுமான மனோகரன், ராஜா உள்பட 20 போ் மீது திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.