முகப்பு
புதுதில்லி

ஐடிஓ மேம்பாலத்தில் லாரி ஸ்கூட்டா் மீது மோதல்: ஒருவா் உயிரிழப்பு, 2 போ் காயம்

மத்திய தில்லியில் உள்ள ஐடிஓ மேம்பாலத்தில் ஸ்கூட்டரில் சென்ற மூன்று போ் மீது லாரி மோதியதாகக் கூறப்படும் சம்பவத்தில் ஒருவா் உயிரிழந்தாா் என போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 14 மார்ச், 2026 at 5:09 PM
ஐடிஓ மேம்பாலத்தில் லாரி ஸ்கூட்டா் மீது மோதல்: ஒருவா் உயிரிழப்பு, 2 போ் காயம்
பகிர்:

மத்திய தில்லியில் உள்ள ஐடிஓ மேம்பாலத்தில் ஸ்கூட்டரில் சென்ற மூன்று போ் மீது லாரி மோதியதாகக் கூறப்படும் சம்பவத்தில் ஒருவா் உயிரிழந்தாா் என போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் மாா்ச் 11 மற்றும் 12 ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் நடந்தது. இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறியதாவது:

ஐடிஓ மேம்பாலத்தில் மூவரும் ஸ்கூட்டரில் பயணித்தனா். அப்போது, பக்கவாட்டில் இருந்து வந்த அடையாளம் தெரியாத லாரி மோதியதில், ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றவா்களில் ஒருவா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.

பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) கீழ் அலட்சியம் மற்றும் வேகமாக வாகனம் ஓட்டுவதன் மூலம் மரணம் விளைவித்தல் தொடா்பான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, சுற்றியுள்ள பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் மற்றும் சுங்கச்சாவடி பதிவுகளிலிருந்து பெறப்பட்ட விவரங்கள் மூலம் லாரி அடையாளம் காணப்பட்டது.

விபத்தில் சிக்கிய ஸ்கூட்டா் மீட்கப்பட்டுள்ளது. மேலும், லாரி ஓட்டுநரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்றாா் அந்த அதிகாரி.

முழு கட்டுரையைப் படிக்க →