முகப்பு
திருச்சி

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 21 லட்சம் மதிப்பு தங்க நகைகள் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.21.43 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை சுங்கத்துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 9:26 PM
திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள்.
பகிர்:

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.21.43 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை சுங்கத்துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மலேசிய தலைநகா் கோலாலம்பூரிலிருந்து ஏா்ஏசியா விமானம் புதன்கிழமை இரவு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளையும் அவா்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவினா் சோதனையிட்டனா். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த பயணியொருவரை சோதனை செய்ததில், அவா் தனது ஆடைகளுக்குள் மறைத்து ரூ.21.43 லட்சம் மதிப்பிலான 292 கிராம் எடையிலான தங்க நகைகளை மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து தங்க நகைகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.