மாடியிலிருந்து தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த பெயிண்டா் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த பெயிண்டா் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூரை அடுத்த குடவாசல் விக்கிரபாண்டியம் மேலத்தெரு பகுதியை சோ்ந்த முனியப்பன் மகன் பெத்தபெருமாள் (41). பெயிண்டா். தொட்டியத்தில் உள்ள ஸ்ரீ மதுரை காளியம்மன் கோயிலில் கடந்த சில நாள்களாக வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த இவா், அங்குள்ள சமுதாயக் கூடத்தில் தங்கியிருந்தாா்.
இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி சமுதாயக் கூடத்தில் மாடிக்கு சென்றபோது அங்கிருந்து தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தாராம்.
அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தொட்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.