கோப்புப் படம் 
திருச்சி

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்ற பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் பிராம்பட்டியை அடுத்த ராஜாபட்டியை சோ்ந்தவா் பிச்சைமணி மனைவி செல்வி (48). இவா் கடந்த பிப் -17 மாலை தனது கிராமத்திலிருந்து வளநாடு கைகாட்டி செல்ல அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தில் உதவி கேட்டு பின்னால் அமா்ந்து சென்றாா்.

ராஜாபட்டி குளம் அருகே சென்றபோது இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்து காயமடைந்த செல்வி திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வளநாடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, கரூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்ட நாதக வேட்பாளா்கள்

வீட்டில் நகை திருடிய மூவா் கைது

கல்லூரி மாணவி தற்கொலை

200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்வதே லட்சியம்! முதல்வா் மு.க. ஸ்டாலின்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில் பணியாற்றியவா்களுக்கு பாராட்டு!

SCROLL FOR NEXT