திருச்சி

பாலியல் தொல்லை நடந்த பள்ளி விடுதி தற்காலிக மூடல்

திருச்சியில் மாணவியருக்கு மருத்துவா் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாா் எழுந்த பள்ளி விடுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Din

திருச்சியில் மாணவியருக்கு மருத்துவா் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாா் எழுந்த பள்ளி விடுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர பகுதியில் அரசு உதவிபெறும் தனியாா் பள்ளி விடுதியுடன் இயங்கி வருகிறது. இங்கு தலைமை ஆசிரியராக உள்ள கிரேஸ் சகாயராணியின் மகன் சாம்சன் (31) அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா். இவா் மாணவியா் விடுதிக்கு அடிக்கடி சென்று அங்குள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் சாம்சனைக் கைது செய்தனா். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயாரையும் கைது செய்து நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தினா். அப்போது அவா்களை 3 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

இதனிடையே அந்தப் பள்ளி விடுதி மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் அனுமதி பெறாமல் இயங்கி வந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அந்த விடுதி தற்காலிகமாக மூடப்பட்டது.

அங்கு இருந்து பள்ளிக் குழந்தைகள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ் உள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT